search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்னாப்
    X
    அர்னாப்

    என்னுடன் விவாதம் நடத்த வாருங்கள் - உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடும் அர்னாப் கோஸ்வாமி

    தன்னுடன் விவாதம் நடத்த வரும்படி உத்தவ் தாக்கரேவுக்கு ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சவால் விடுத்துள்ளார்.
    மும்பை:

    மஹாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். 

    அவரை தற்கொலைக்கு துாண்டியதாக ரிபப்ளிக் டிவி ஆசிரியரும், ஊடகவியலாளர்  அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை மும்பை போலீசார் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். 

    இந்த வழக்கில் ஜாமீன் கோரி அர்னாப் உள்ளிட்ட மூவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 9-ம் தேதி நிராகரிக்கப்பட்டது. 

    இதையடுத்து, அர்னாப் உள்பட 3 பேரும் ஜாமீன் கோரி அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெறுவதற்கு முன்னர் அர்னாப் இடைக்கால ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று (நவ.,11) விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, மூவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். 

    இதையடுத்து,  சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்னாப் கோஸ்வாமி நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான அர்னாப் கோஸ்வாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாராஷ்டிர அரசு என்னை சட்டவிரோதமாக கைது செய்தது. சுதந்திரமான ஊடகத்தை பின்னுக்கு தள்ளமுடியாது என்பதை மகாராஷ்டிர அரசு புரிந்து கொள்ளவில்லை. 

    உத்தவ் தாக்கரேவுக்கு எனது ஊடகவியலில் பிரச்சனை இருந்தால் அவர் எனக்கு நேர்காணல் (இண்டர்வியூ) கொடுக்கலாம். அவருடன் நான் கருத்து ரீதியில் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரங்கள் தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த வரும்படி உத்தவ் தாக்கரேவுக்கு நான் சவால் விடுகிறேன்.

    என்றார். 
    Next Story
    ×