
கேரள மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் (வயது 68). தலைநகர் டெல்லி சென்று திரும்பிய கவர்னருக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை கேரள ராஜ்பவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.