search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள பா.ஜ.க. தொண்டர்கள்
    X
    இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள பா.ஜ.க. தொண்டர்கள்

    பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை.... இனிப்பு தயாரிக்கும் பணியில் பா.ஜ.க தொண்டர்கள்

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. தொண்டர்கள் இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் 7-ம் தேதியும் நடைபெற்றது. 

    பீகார் தேர்தலில் தற்போது முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.

    இந்நிலையில், பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் பா.ஜ.க.வினர் உள்ளனர்.  இதனை முன்னிட்டு பாட்னா சாஹிப் தொகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் உற்சாகமுடன் ஈடுபட்டு உள்ளனர்.  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்புக்கு பின்னர் தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு வழங்குவதற்காக இந்த இனிப்புகளை தயார் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×