search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் உள்ள கடைவீதியில் குவிந்த மக்கள்
    X
    மகாராஷ்டிராவில் உள்ள கடைவீதியில் குவிந்த மக்கள்

    தீபாவளி பண்டிகை - மகாராஷ்டிரா, டெல்லியின் முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள்

    தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மகாராஷ்டிரா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களின் கடைவீதிகளில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
    மும்பை:

    தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்களில் தீபாவளி பண்டிக்கையின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகையின் போது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பல மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

    தீபாவளிக்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள கடைவீதி பகுதிகளில் மக்கள் குவிந்தனர்.

    மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள சீதபுல்டி சந்தை பகுதியில் தீபாவளி பண்டிகைகான பொருட்களை வாங்கும் நோக்கும் நோக்கத்தோடு மக்கள் குவிந்தனர். மக்கள் பெருமளவில் குவிந்ததால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தன. சமூக இடைவெளி, முகக்கவசம் இன்றி மக்கள் கடைவீதி பகுதிகளில் குவிந்ததால் கொரோனா பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல், தலைநகர் டெல்லியின் ஜன்பாத் பகுதியில் உள்ள சந்தையில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால், கொரோனா தடுப்பு வழிமுறைகள் இன்றி வழக்கமான சந்தை பகுதி போன்று பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

    கொரோனா அச்சுறுத்தலையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்தைகளில் மக்கள் குவிந்ததால் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×