search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேஜஸ்வி யாதவ் - நிதிஷ் குமார்
    X
    தேஜஸ்வி யாதவ் - நிதிஷ் குமார்

    பீகாரை கைப்பற்றப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

    பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. 

    இதற்கிடையில், மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடந்து முடிந்துள்ளது. இந்த 3-ம் கட்ட தேர்தலில் 55.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் தேர்தலில் தற்போது முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    இதேபோல் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி சிரங் பாஸ்வான் தலைமையில் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

    இறுதி கட்ட தேர்தலும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பீகார் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை
    வெளியிட்டு வருகின்றன. 

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

    பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:-  

    * டைம்ஸ் நவ் - சி ஓட்டர்

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 120 இடங்கள் 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 116 இடங்கள்

    லோக் ஜனசக்தி கட்சி - 1 இடம்

    மற்றவை - 6 இடங்கள்

    * ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத்:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 118 முதல் 138 இடங்கள் வரை 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 91 முதல் 117 இடங்கள் வரை

    லோக் ஜனசக்தி கட்சி - 5 முதல் 8 இடங்கள் வரை

    மற்றவை - 3 முதல் 6 இடங்கள் வரை

    * நியூஸ் எக்ஸ் - டிவி ரிசர்ச்:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 108 முதல் 123 இடங்கள் வரை 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 110 முதல் 117 இடங்கள் வரை

    லோக் ஜனசக்தி கட்சி - 4 முதல் 10 இடங்கள் வரை

    மற்றவை - 8 முதல் 23 இடங்கள் வரை

    * இந்தியா டுடே - ஆக்சிஸ் மை லைப்:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 139 முதல் 161 இடங்கள் வரை 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 69 முதல் 91 இடங்கள் வரை

    லோக் ஜனசக்தி கட்சி - 3 முதல் 5 இடங்கள் வரை

    மற்றவை - 6 முதல் 10 இடங்கள் வரை 

    * டைனிங் பாஸ்கர்:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 71 முதல் 81 இடங்கள் வரை 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 120 முதல் 127 இடங்கள் வரை

    லோக் ஜனசக்தி கட்சி - 12 முதல் 23 இடங்கள் வரை

    மற்றவை - 19 முதல் 27 இடங்கள் வரை

    * சி.என்.என் நியூஸ் 18 - டுடேஸ் சானக்யா:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 180 இடங்கள் 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 55 இடங்கள் 

    லோக் ஜனசக்தி கட்சி - 0

    மற்றவை - 8 இடங்கள் 

    * 6 செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் மொத்த கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில்:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 128

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 99 இடங்கள் 

    லோக் ஜனசக்தி கட்சி - 6 இடங்கள்

    மற்றவை - 10 இடங்கள் 

    * என்டிடிவி செய்தி நிறுவனத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி - 128 இடங்கள் 

    பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி - 99 இடங்கள்

    லோக் ஜனசக்தி கட்சி - 6 இடங்கள்

    மற்றவை - 0
    Next Story
    ×