search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதிஷ் குமார்
    X
    நிதிஷ் குமார்

    ’இதுவே என் கடைசி தேர்தல்' - பிரசார நிகழ்ச்சியின் போது தனது அரசியல் ஓய்வை அறிவித்த நிதிஷ் குமார்

    பீகாரில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலே தனது கடைசி தேர்தல் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதல்மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இடண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3 நடைபெற்றது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நாளை (நவம்பர் 7) நடைபெற உள்ளது.
     
    இந்த தேர்தலில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

    இதற்கிடையில், 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் தேர்தலுக்கு பின்னர் தான் தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என பீகார் முதல்மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பூர்னியா பகுதியில் பிரசார நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார் ‘இதுவே எனது கடைசி தேர்தல்’ என தெரிவித்தார். 69 வயது நிரம்பிய நிதிஷ் குமார் 2005-ம் ஆண்டு முதல் பீகார் முதல்மந்திரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×