search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஓடிசாவில் உள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து மொத்தம் 6 பினாகா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. இதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. இவை 37 கி.மீ. தூரம் சென்று இலக்கை அழிக்கும் திறன் கொண்டவை.

    இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவை தற்போது தயாரிப்பில் உள்ள பினாகா எம்.கே. ஏவுகணைகளுக்கு மாற்றாக அமையும் என டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களில் பிரம்மோஸ், ருத்ரம் 1 உள்ளிட்ட பல ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. சோதனை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×