search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹண்டர்பெல் மாவட்ட போலீஸ் அதிகாரி
    X
    ஹண்டர்பெல் மாவட்ட போலீஸ் அதிகாரி

    காஷ்மீர்: பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் கைது

    காஷ்மீரில் கடந்த மாதம் 6-ம் தேதி பாஜக நிர்வாகியை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாஜக நிர்வாகியின் பாதுகாவலரான போலீஸ் காண்ஸ்டபில் முகமது அல்டாப் உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹண்டர்பெல் மாவட்ட பாஜக துணைதலைவரான குலாம் காதீர் கடந்த மாதம் 6-ம் தேதி இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பிற்காக போலீஸ் காண்ஸ்டபில் முகமது அல்டாப் உடன் இருந்தார்.

    அப்போது, அங்கு வந்த 4 பயங்கரவாதிகள் குலாமை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது குலாமை பாதுகாக்கும் பணியில் இருந்த போலீஸ் காண்ஸ்டபில் முகமது அல்டாப் உயிரிழந்தார். 

    தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 1 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். எஞ்சிய பயங்கரவாதிகள் தப்பிச்சென்றனர்.

    இதையடுத்து, இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த காஷ்மீர் போலீசார் தப்பியோடிய பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆகும். 

    மருத்துவமனையில் பாதுகாவலராக பணியாற்றிவந்த அகமது ஷேக், எடிஎம் பாதுகாவலராக செயல்பட்டுவந்த ஹிலால் அமகது மீர், தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக செயல்பட்டுவந்த ஆசிப் அகமது மீர் ஆகியோர் இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கன்னிவெடிகள், பாகிஸ்தான் கொடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹண்டர்பெல் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

    மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. 
    Next Story
    ×