search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி - சரிதா நாயர்
    X
    ராகுல்காந்தி - சரிதா நாயர்

    ராகுல்காந்தியின் வயநாடு தொகுதி வெற்றியை எதிர்த்து சரிதாநாயர் தொடர்ந்த வழக்கு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து சரிதா நாயர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வியை தழுவினார்.

    ராகுல்காந்தி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அவரை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் போட்டியிட்டார்.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதாநாயர், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தன்னை ஆட்சியாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

    வயநாடு தொகுதியில் சரிதாநாயரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அமேதி தொகுதியில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் அமேதி தொகுதியில் அவர் தேர்தலில் போட்டியிட்டார். 

    ஆனால், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சரிதாநாயர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.

    இந்நிலையில், இந்த வழக்குதொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி பெற்ற வெற்றியை எதிர்த்து சரிதா நாயர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×