என் மலர்

  செய்திகள்

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
  X
  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

  மாநிலங்கள் உதய நாள்... ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு மாநிலமும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமைதி மற்றும் செழிப்புக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. மெட்ராஸ் பிரெசிடென்சியில் இருந்து பல பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. எஞ்சிய பகுதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உதயமான நாள் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

  அவ்வகையில் இன்று மாநில உதய நாள் கொண்டாடும் மாநில மக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமைதி மற்றும் செழிப்புக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  இந்த மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் புவியியல் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன. மேலும் அவை இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்கள் மூலம் நாட்டை வளப்படுத்தியுள்ளன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலம் அமைய வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.
  Next Story
  ×