search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாரதி பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

    குஜராத் மாநிலத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி நேற்று மரியாதை செலுத்தி விட்டு உரையாற்றியபோது, பாரதியாரின் பாடலை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
    ஆமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தனது பேச்சில் திருக்குறள், பாரதியார் பாடல்கள், கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழின் மகோன்னத இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம்.

    அந்த வகையில் குஜராத் மாநிலத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி நேற்று மரியாதை செலுத்தி விட்டு உரையாற்றியபோது, பாரதியாரின் பாடலை அவர் மேற்கோள் காட்டி பேசினார். அப்போது அவர்:-

    மன்னும் இமயமலை யெங்கள் மலையே

    மாநில மீதிது போற் பிறிதிலேயே

    இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே

    இங்கிதன் மாண்பிற் கெதிரது வேறே

    பன்னரு முபநிடநூ லெங்கள் நூலே

    பார் மிசை யேதொரு நூல்இது போலே

    பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே

    போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே

    - என்ற பாரதியாரின் பாடலை அப்படியே சொல்லி அசத்தினார்.

    இமயமலை மீதான நமது உரிமை...

    இந்தப் பாடலில் நமது நாட்டின் அருமை பெருமைகளை பாரதியார் அழகுபட கூறி இருக்கிறார்.

    இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியார் வரிகளை மோடி கூறியதின் மூலம் லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு மோதல் போக்கை கையாளும் சீனாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கெல்லாம் இமயமலை மீதான நமது உரிமையை பறை சாற்றி இருப்பது சிறப்பு.
    Next Story
    ×