search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத்சிங்
    X
    ராஜ்நாத்சிங்

    ’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு

    நமது 40 வீரர்களை இழந்த புல்வாமா தாக்குதலின் போது நான் உள்துறை மந்திரியாக இருந்தேன். அந்த தாக்குதல் தேர்தலில் அனுதாபம் பெற பிரதமரால் நடத்தப்பட்ட சதி என்று காங்கிரஸ் அழைத்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான முதல்கட்ட தேர்தல் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற்றது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவும் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

    இதில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

    இதற்கிடையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் பாட்னாவில் இன்று பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    பிரசர நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

    நமது வீரமிகு ராணுவ வீரர்கள் மீது காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. நமது நிலப்பரப்பில் 1,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா கைப்பற்றிவிட்டதாக சிலர் பேசிவருகின்றனர். அது தொடர்பான உண்மைகளை நான் வெளியே கூறினேன் என்றால் அவர்களது (காங்கிரஸ்) முகத்தை பாதுகாத்துக்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும்.

    40 வீரர்களின் வீரமரணமடைய காரணமான புல்வாமா தாக்குதல் நடந்தபோது நான் உள்துறை மந்திரியாக இருந்தேன். புல்வாமா தாக்குதல் தேர்தலில் அனுதாபம் பெற பிரதமரால் நடத்தப்பட்ட சதி என்று அவர்கள் (காங்கிரஸ்) கூறினர். அப்படியொரு மோசமான அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்.

    என்றார்.

    இதற்கிடையில், கடந்த 29-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி பவாத் சௌதிரி, ’புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் அரசின் மிகப்பெரிய சாதனை’ என்று கூறி புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசின் நேரடித்தொடர்பை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×