
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டோக்கன் என்ற அடிப்படையில் காலை 7 மணி முதல் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல் நாள் இரவு முதலே, டோக்கன் பெற ஏராளமான பக்தர்கள் கவுண்டர்களில் காத்திருக்கின்றனர்.
இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைன் மூலம் வழங்கினால் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்த இயலும் என கோரிக்கை எழுந்துள்ளது.