search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி
    X
    பட்டேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. 

    இதையொட்டி டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித் ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பாஜ்பாய் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×