search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

    குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.
    காந்திநகர்:

    பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்-மந்திரி விஜய் ருபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    முன்னதாக கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார். பூங்காவினுள் சுற்றி வந்த ரெயிலில், குழந்தைகளுடன் பிரதமர் மோடியும் பயணம் செய்து மகிழ்ந்தார். குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ருபானி, ஆளுநர் ஆச்சர்யா தெவ்வரத் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.  

    இன்று (சனிக்கிழமை) கேவாடியா - அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார். முன்னதாக நேற்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பாஜக முன்னாள் எம்.பி.,, மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
    Next Story
    ×