search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் முதலிடம்

    தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
    புதுடெல்லி:

    மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ சேவை வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ‘இசஞ்சீவனி’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வெளிநோயாளிகள் பிரிவு 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களுடன் 217 ஆன்லைன் பிரிவுகளில் சேவை வழங்குகிறது. இந்த தளத்தில் இதுவரை நாடு முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரத்து 164 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆலோசனை வழங்கலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. இரண்டாவதாக உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 553 ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய தமிழக மாவட்டங்கள் நாட்டிலேயே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×