search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
    X
    டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    டெல்லியில் மாநகராட்சி டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி

    டெல்லியில் மாநகராட்சி மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சி (வடக்கு) நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு கடந்த 3 நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி மூத்த டாக்டர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர்.

    இதனால் நோயாளிகள் அவதியுற்றனர். எனினும் அவர்களது சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாநகராட்சி (வடக்கு) ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    இதையொட்டி அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனால் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் அனைவரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் மாநிலங்களில் டெல்லியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×