search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் மாநகராட்சி டாக்டர்கள் கூண்டோடு விடுப்பு

    டெல்லி மாநகராட்சி (வடக்கு) நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுகிற மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் மாநகராட்சி டாக்டர்கள் சம்பள பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி (வடக்கு) நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுகிற மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர்.

    இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

    இதையொட்டி மாநகராட்சி டாக்டர்கள் சங்க தலைவர் ஆர்.ஆர்.கவுதம் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கால வரையறையற்ற வேலை நிறுத்தம் நடத்துவோம்” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×