என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் பெருமளவு குறைந்த கொரோனா
Byமாலை மலர்26 Oct 2020 10:21 PM IST (Updated: 26 Oct 2020 10:21 PM IST)
மகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது. அதேவேளை, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 3 ஆயிரத்து 645 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 48 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 905 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 70 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×