search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகபூபா
    X
    மெகபூபா

    மெகபூபா முப்தியின் பேச்சு தேசப்பற்றை புண்படுத்துகிறது - பிடிபி கட்சியில் இருந்து 3 தலைவர்கள் ராஜினாமா

    மெகபூபா முப்தியின் சில பேச்சுக்கள் தேசப்பற்று உணர்வை புண்படுத்துவதாக கூறி மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 3 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கடந்த 23-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். 

    அந்த சந்திப்பின் போது, மேஜையில் இருந்த ஜம்மு காஷ்மீர் கொடியை காட்டி இது தான் எனது கொடி என்றார். இந்த கொடி (ஜம்முகாஷ்மீர் கொடி) மீண்டும் எப்போது வருகிறதோ அப்போது தான் நாங்கள் அந்த கொடியை ஏற்றுவோம் (இந்திய தேசியக்கொடி).. எங்களுக்கு சொந்தமான கொடியை மீண்டும் கொண்டுவரும் வரை நாங்கள் வேறு எந்த கொடியையும் ஏற்றமாட்டோம். 

    இந்த கொடிதான் ( ஜம்மு காஷ்மீர் கொடி) அந்த கொடியுடனான (இந்திய தேசிய கொடி) எங்கள் இணைப்பை உருவாக்கியது. இந்த கொடி (ஜம்மு காஷ்மீர் கொடி) எப்போது எங்கள் கைகளுக்குள் வருகிறதோ அப்போதுதான் நாங்கள் அந்த கொடியை (இந்திய தேசிய கொடி) ஏற்றுவோம் என்றார்.

    மெகபூபா முப்தியின் கருத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பல்வேறு தரப்பினரும் மெகபூபாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 3 தலைவர்கள் இன்று கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளனர். அக்கட்சியின் தலைவர்களான டிஎஸ் பாஜ்வா, வேத் மகாஜன் மற்றும் ஹசன் ஏ வாஃபா ஆகிய 3 பேரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் மெகபூபா முப்தியிடம் வழங்கியுள்ளனர். 

    தங்கள் ராஜினாமா கடிதத்தில் கட்சி தலைவர் மெகபூபாவின் சில செயல்கள் மற்றும் விரும்பத்தகாத பேச்சுக்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாவும், குறிப்பாக தேசப்பக்தி உணர்வை புண்படுத்தும் வகையில் இருந்ததாலும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×