search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கேரளாவில் வடகிழக்கு பருவமழை 28ந்தேதி தொடங்கும்- வானிலை மையம் தகவல்

    கேரளாவில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வருகிற 28-ந்தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை இம்மாதம் 15-ந்தேதியே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தாமதமாக 28-ந்தேதி தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் வடகிழக்கு பருவமழையும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கேரளாவில் நாளை முதல் கனமழை பெய்யுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யுமென்றும், கோட்டயம், பத்தினம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில் நாளை மறுநாளும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×