search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வதேந்திர தேவ் சிங்
    X
    ஸ்வதேந்திர தேவ் சிங்

    சீனா, பாகிஸ்தானுடனான போரை பிரதமர் முடிவு செய்துவிட்டார் - உ.பி. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

    சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் போர் செய்வது பற்றி பிரதமர் மோடி முடிவு செய்து வைத்துள்ளார் என உ.பி. பா.ஜ.க. தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக இருப்பவர் ஸ்வதேந்திர தேவ் சிங்.  இவர் அக்கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்பொழுது, ராமர் கோவில் மற்றும் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ஆகியவற்றின் மீது முடிவுகள் எடுத்ததுபோல், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீது போர் தொடுப்பது பற்றி பிரதமர் மோடி முடிவு செய்து வைத்துள்ளார் என தெரிவித்தார்.

    மேலும், சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தொண்டர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

    எல்லையில் சீனாவுடனான பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்காக ஓரங்குல நிலம் கூட யாராலும் எடுத்து செல்ல முடியாது என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா மற்றும் சீனா இடையே உண்மை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் போர் செய்வது பற்றி பிரதமர் மோடி முடிவு செய்து வைத்துள்ளார் என பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×