search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திரபட்னாவிஸ்
    X
    தேவேந்திரபட்னாவிஸ்

    மகாராஷ்டிர முன்னாள் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-க்கு கொரோனா

    மகாராஷ்டிர முன்னாள் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் முதல் மத்திய மந்திரிகள், மாநிலமுதல்மந்திரிகள் என அனைவரும் இலக்காகி வருகின்றனர்.

    அந்த வகையில், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்மந்திரியும், பாஜக தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ்க்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவேந்திர பட்னாவிஸ் பீகாரில் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

    இந்நிலையில், பட்னாவிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

    இது தொடர்பாக பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து திணமும் நான் வேலை செய்து வருகிறேன். ஆனால், தற்போது நான் எனது வேலைகளை நிறுத்திவிட்டு சிறிது நேரம் இடைவெளி எடுக்க வேண்டும் என கடவுள் எண்ணுகிறார் என்று நினைக்கிறேன். 

    எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரை படி மருந்துகளையும், சிகிச்சையும் பெற்று வருகிறேன். 

    என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

    பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×