search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏவுகணை சோதனை
    X
    ஏவுகணை சோதனை

    கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை சோதனை செய்தது இந்திய கடற்படை

    எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
    மும்பை:

    நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது. லடாக் எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம் நிலவும் நிலையில், கடந்த 2 மாதமாக இந்தியா பல்வேறு ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. அதில் தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ், பிருத்வி-2, ருத்ரம்-1, சவுர்யா, நாக் உள்ளிட்ட ஏவுகணைகளும் அடங்கும்.

    இந்நிலையில் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை இன்று பயிற்சியின்போது சோதனை செய்தது. அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் பிரபால் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. 

    அதில், ஏவுகணை கடலில் மற்றொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய கப்பலைத் துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. ஏவுகணை செலுத்தப்பட்டபோது எடுத்த வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×