search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில்
    X
    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில்

    கொரோனா தடுப்பூசி பா.ஜ.க.வுக்கு தேர்தல் லாலிபாப் -தேர்தல் அறிக்கையை விமர்சித்த காங்கிரஸ்

    2024 வரை தேர்தல் இல்லாத மாநிலங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும்? என்றும் பாஜகவிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டது.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை தேர்தல் லாலிபாப் என்று கருதும் உலகின் ஒரே அரசியல் கட்சி பாஜகவாகத் தான் இருக்கும். கொரோனாவுடன் பாஜகவின் தீய மனநிலைக்கும் சிகிச்சை தேவை’ என்றார்.

    2022, 2023 மற்றும் 2024 வரை தேர்தல் இல்லாத மாநிலங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும்? என்றும் பாஜகவிடம் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    ‘பீகார் மாநிலத்திற்கு 19 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியானது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற முந்தைய வாக்குறுதியின் தம்பி. இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால், இருவரும் டெல்லி ரெயில் நிலையத்தைவிட்டு பாட்னாவுக்கோ நாட்டின் பிற பகுதிகளுக்கோ இன்னும் புறப்படவில்லை. இனி புறப்படவும் மாட்டார்கள்’ என்றும்  ஜெய்வீர் ஷெர்கில் விமர்சித்துள்ளார்.
    Next Story
    ×