search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
    X
    பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

    பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்- பாஜக தேர்தல் அறிக்கை

    பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

    பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

    பீகாரில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் வளர்ச்சி அடையவில்லை. எங்கள் அரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்ததால் இந்த வளர்ச்சி சாத்தியமானது’ என்றார்.
    Next Story
    ×