search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானப்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி ரமணன்
    X
    விமானப்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி ரமணன்

    விமானப்படையின் முதல் பெண் அதிகாரி மரணம் - 96 வயதில் காலமானார்

    விமானப்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி ரமணன், வயது முதிர்வால் நேற்று காலமானார்.
    பெங்களூரு:

    இந்திய விமானப்படையின் முதல் பெண் ‘கமிஷன்டு ஆபீஸர்’ அதிகாரியாக பணி நியமனம் பெற்றவர் விஜய லட்சுமி ரமணன். இவர் 1924-ம் ஆண்டும் பெங்களூருவில் பிறந்தவர். எம்.பி.பி.எஸ். படித்த இவர், ராணுவத்தின் மருத்துவர்கள் பிரிவில் 1955-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சேர்ந்தார். அவர் விமானப்படைப் பிரிவில் பணியாற்ற பணியமர்த்தப்பட்டார். அவர் பல்வேறு விமானப்படை மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். காயம் அடையும் ராணுவ வீரர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்.

    விஜயலட்சுமி ரமணன், 1972-ல் விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். அவரது சேவைப் பணிக்காக விஷிஸிஸ்ட் சேவா மெடல் விருதை 1977-ல் பெற்றார். 1979-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். அவரது கணவர் கே.வி.ரமணனும், இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். விஜயலட்சுமி ஓய்வுக்குப் பின் பெங்களூருவில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொடுத்து வந்தார். 96 வயதான விஜயலட்சுமி ரமணன், வயது முதிர்வால் நேற்று காலமானார்.
    Next Story
    ×