search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏக்நாத் கட்சே
    X
    ஏக்நாத் கட்சே

    பாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, பாஜகவில் இருந்து விலகினார்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் கட்சே. மூத்த தலைவரான இவர், ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை இழந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
     
    இந்த நிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், இதனை பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்திருந்தார். பா.ஜனதாவில் இருந்து விலகியதாக வெளியான தகவலை ஏக்நாத் கட்சேவும் மறுத்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் பாஜகவின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபட்ட ஏக்நாத் கட்சே ராஜினாமா செய்ததாக தேசியவதாத காங்கிரஸ் தலைவரும் மாநில மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் இன்று கூறினார். அவரை  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்க்க உள்ளதாகவும் கூறினார்.

    அதனை உறுதி செய்யும் வகையில், ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.
    Next Story
    ×