search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல்-மந்திரி பினராயி விஜயன்

    அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்- பினராயி விஜயன் தகவல்

    திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு ரூ.194.33 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைக்கான வளர்ச்சி திட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை ஆன்லைன் வாயிலாக முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியினை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான 2-ம் கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.194.33 கோடி மதிப்பிலான அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு உ ள்ளது. மருத்துவ கல்லூரியின் ரேடியோ டயனஸ்டிக் பிரிவில் புதிதாக டி.எஸ்.ஏ., டிஜிட்டல் புளோரோஸ் காப்பி, டிஜிட்டல் மாம் மோகிராம் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் 11 மாடிகளை கொண்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவு, 8 மாடிகளை கொண்ட அறுவை சிகிச்சை பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. நவீன மருத்துவ உபகரணங்கள் மூலமாக குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியும். திருவனந்தபுரம் ரோட்டரி கிளப் நன்கொடையாக வழங்கிய ரூ.1 கோடியில் புற்று நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் மாம்மோகிராம் உபகரணம் நிறுவப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், சுகாதார துறை மந்திரி கெ.கெ.சைலஜா தலைமை தாங்கினார். சுற்றுலா மற்றும் தேவஸ்தான மந்திரி சிறப்புரையாற்றினார். மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாரா வர்க்கீஸ் வரவேற்று பேசினார். சசி தரூர் எம்.பி. உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
    Next Story
    ×