search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள சேதத்தை பார்வையிடும் ஜெகன் மோகன் ரெட்டி
    X
    வெள்ள சேதத்தை பார்வையிடும் ஜெகன் மோகன் ரெட்டி

    ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

    ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டார்.
    அமராவதி:

    மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    அது காக்கிநாடா அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

    இந்த மழையால், பலத்த சேதம் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்தது.

    விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் சாலைகள் உருக்குலைந்தன. மின் வினியோக கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.

    இந்நிலையில், ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
    Next Story
    ×