search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
    X
    சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

    ஜல்காவில் 4 சிறுவர்கள் படுகொலை- 3 பேர் பிடிபட்டனர்

    ஜல்காவில் 4 சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மும்பை:

    ஜல்காவ் மாவட்டம் ராவர் தாலுகா போர்கேடா சிவார் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மெக்தாப் குலாப் பிலாலா என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மனைவி, மூத்த மகனுடன் உறவினரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய பிரதேசம் சென்றுவிட்டார். வீட்டில் அவரின் சிறுபிள்ளைகளான சங்கீதா (வயது13), ராகுல் (11), அனில் (8), நானி (6) மட்டுமே இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர். அப்பாவி சிறுவா்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.

    இதற்கிடையே போலீசார் சிறப்பு படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் அவர்கள் 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மெக்தாப் குலாப் பிலாலாவின் மூத்த மகனின் நண்பா்கள் என போலீசார் கூறியுள்ளனர். மேலும் அவர் சொந்த ஊர் செல்லும் போது சிறுவர்களை பார்த்து கொள்ளுமாறு மகனின் நண்பர்களிடம் கூறி சென்று உள்ளார். ஆனால் அவர்களே சிறுவர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனித தன்மையற்றது எனவும், இந்த வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெறும் எனவும் கூறினார்.

    மேலும் வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்காக பிரபல வக்கீல் உஜ்வால் நிகம் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராவார் எனவும் தெரிவித்தார். உள்துறை மந்திரியுடன் பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஏக்னாத் கட்சே, ராக்சா கட்சே எம்.பி.யும் இருந்தனர்.
    Next Story
    ×