search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, அமித்ஷா
    X
    பிரதமர் மோடி, அமித்ஷா

    பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? - அமித்ஷா பரபரப்பு பேட்டி

    பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.
    புதுடெல்லி:

    பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நரேந்திர மோடி அரசு நாட்டை பலவீனப்படுத்துகிறது என்றும், இந்தியாவுக்குள் சீனா நுழைந்து நமது வீரர்களை கொல்ல துணிந்தது என்றும் ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?

    பதில்:- ராகுல் காந்தி ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இப்படி கருத்துக்களை வெளியிட காங்கிரசுக்கு உரிமை இல்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது எவ்வளவு நிலப்பரப்பை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது என்பது குறித்து நாட்டுக்கு அவர் கணக்கு கொடுக்கட்டும். 1962-ல் அவரது கொள்ளுதாத்தா நேரு பிரதமராக இருந்தபோது நடந்ததை சொல்கிறேன்.

    கேள்வி:- கிழக்கு லடாக்கில் இந்தியாவுடன் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில் சீன படை வீரர்களை போருக்கு தயாராக இருக்குமாறு ஜின்பிங் கூறி இருப்பது பற்றி?

    பதில்:- ஒவ்வொரு நாடும் எப்போதும் போருக்கு தயாராக உள்ளது. படைகளை பராமரிப்பதின் நோக்கம் இதுதான். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதில் அளிக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு படைகள் எப்போதும் தயாராக உள்ளன. இந்திய ராணுவம் எப்போதும் எந்தவொரு நிகழ்வுக்கும் தயாராக உள்ளது.

    கேள்வி:- வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்துகிறார்களே?

    பதில்:- விவசாயிகளை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தூண்டி விடுகிறது. வேளாண் சட்டம், விவசாயிகள் அதிகம் சம்பாதிக்க உதவும். மண்டிக்கு வெளியேயும் அவர்கள் விற்க முடியும். குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும். குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்காது என்று எந்த சட்டமும் கூறவில்லை. அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த லாபத்துக்காக வேளாண் சட்டங்களை பிரச்சினையாக்குகின்றன. மண்டிகள் மூடப்படாது. விவசாயிகளுக்கு 50 சதவீத லாபம் கிடைக்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் பா.ஜ.க தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

    கேள்வி:- அடுத்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பற்றி?

    பதில்:- மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இது தவிர்க்க முடியாதது. நாங்கள் சிறந்த ஆட்சியை தருவோம். முதல்-மந்திரி வேட்பாளரை முன்னிலைப்படுத்துவது சாத்தியம். ஆனால் மேற்கு வங்காள மக்கள் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அரசிடம் இருந்து விடுபட விரும்புகிறார்கள். இதுதான் இப்போது மிக முக்கியமானது.

    கேள்வி:- பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளத்தை விட பா.ஜ.க. கூடுதல் இடங்களை கைப்பற்றினால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் மாற்றம் வருமா?

    பதில்:- அந்த பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கூட்டணி 3-ல் இரு பங்கு பெரும்பான்மையை பெறும். நிதிஷ் குமார்தான் அடுத்த முதல்-மந்திரி. நான் இதை சொல்லி இருக்கிறேன். கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவும் கூறி இருக்கிறார். பொதுவெளியில் கொடுத்த வாக்குறுதி மதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
    Next Story
    ×