search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி
    X
    கர்நாடகத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

    கர்நாடகத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

    கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் திரையரங்குகள் 15-ந் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    திரையரங்குகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும். மொத்தம் உள்ள இருக்கைகளில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதாவது அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். திரையரங்குகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். திரையரங்குகளின் நுழைவு வாயில் பகுதியில் சானிடைசர் வைக்க வேண்டும்.

    திரையரங்கில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை முடிந்தவரை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள வேண்டும். தின்பண்டங்களை மூடப்பட்ட பொட்டலங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அரசு கூறியுள்ளது.
    Next Story
    ×