search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஜெனரேட்டர்கள் இயக்க தடை
    X
    டெல்லியில் ஜெனரேட்டர்கள் இயக்க தடை

    டெல்லியில் ஜெனரேட்டர்கள் இயக்க தடை

    டெல்லி மாசுகட்டுப்பாட்டு கமிட்டி, டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் ஆகிய அனைத்து எரிபொருளில் இயங்கும் ஜெனரேட்டர்களை இயக்க இன்று (அக்டோபர் 15) முதல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுடெல்லி :

    கிராப் அமைப்பு, தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவை வெளியிட்டு அதன் மோசமான நிலை குறித்து வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, டெல்லி மாசுகட்டுப்பாட்டு கமிட்டி, டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் ஆகிய அனைத்து எரிபொருளில் இயங்கும் ஜெனரேட்டர்களை இயக்க இன்று (அக்டோபர் 15) முதல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மருத்துவ சுகாதார மையங்கள், ரெயில்வே சேவை, டெல்லி மெட்ரோ, விமான நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை உள்ள இடங்களிலும் இவற்றின் பயன்பாட்டிற்கான தடை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×