search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    தேக ஆரோக்கியமும், மனஉறுதியும் கொரோனாவில் இருந்து மீள உதவின - வெங்கையா நாயுடு நெகிழ்ச்சி

    கொரோனாவில் இருந்து மீண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது கொரோனா கால அனுபவங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனாவில் இருந்து மீண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது கொரோனா கால அனுபவங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-

    எனக்கு வயது மற்றும் நீரிழிவு நோய் போன்ற சில மருத்துவ பிரச்சினைகள் இருந்தாலும், கொரோனா தொற்றை சமாளிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் என் உடல் ஆரோக்கியத்துக்கும், மன உறுதிக்கும் தேவையான நடைபயிற்சி, யோகா பயிற்சிகளை நான் மேற்கொண்டேன். பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டேன். நான் எப்போதும் சுதேசி உணவுகளையே உண்ண விரும்புவேன். தனிமைப்படுத்தல் காலக்கட்டத்திலும் அதைத்தான் தொடர்ந்தேன்.

    எனவே, என் சொந்த அனுபவம் மற்றும் உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், தினமும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். அது நடைப்பயிற்சியாக இருக்கலாம். சிறு ஓட்டம் அல்லது யோகாவாக இருக்கலாம். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், தேவையில்லாத உணவுகளை தவிர்ப்பதும் முக்கியமானது.

    அதைப்போல முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதும் முக்கியமானது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசு நல்ல உத்திகளை பயன்படுத்தி வருகிறது. முககவசம் அணிதல், கை கழுவுதல் மற்றும் பாதுகாப்பான தூர விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வைரசை முறியடிக்க கூட்டு உறுதிப்பாடுகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த நேரத்துக்கு தேவை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×