search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    ராணுவ தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ

    வான் வழி தாக்குதலின் போது எடுக்கப்பட்டது என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இருள் சூழந்த மலை பகுதியில் அதிவேக விமானம் வான்வழி தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நகோர்னோ மற்றும் கரபக் பகுதியில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

    வீடியோவில் அமெரிக்க படைகள் அசர்பைஜானி மிக் 25 ரக விமானத்தை சுட்டு வீழ்த்துவதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அசர்பைஜானி விமானி அமெரிக்க வான்தாக்குதல் பாதுகாப்பு படைகளை நோக்கி கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்த போது வைரல் வீடியோ, ஆர்மா 3 எனும் வீடியோ கேம் காட்சிகள் என தெரியவந்துள்ளது. இது ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    ஆர்மா 3 என்பது ஒபன் வொர்ல்டு, மிலிட்டரி டேக்டிக்கல் ஷூட்டர் வீடியோ கேம் ஆகும். இதனை போஹெமியா இன்டராக்டிவ் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோ ராணுவ தாக்குதலின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×