search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தோர்
    X
    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தோர்

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்து 10 லட்சத்து 309 ஆக இருந்தது. தற்போது வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.
    பெங்களூரு :
     
    சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 7 லட்சத்து 10 லட்சத்து 309 ஆக இருந்தது. நேற்று புதிதாக 7 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை வைரஸ் தொற்றுக்கு 9 ஆயிரத்து 966 பேர் பலியாகி இருந்தனர். நேற்று புதிதாக 70 பேர் இறந்தனர். இதனால் உயிரிழப்பு 10 ஆயிரத்து 36 ஆக உயர்ந்து உள்ளது.

    புதிதாக பாகல்கோட்டையில் 161 பேர், பல்லாரியில் 142 பேர், பெலகாவியில் 444 பேர், பெங்களூரு புறநகரில் 113 பேர், பெங்களூரு நகரில் 3,498 பேர், பீதரில் 18 பேர், சாம்ராஜ்நகரில் 70 பேர், சிக்பள்ளாப்பூரில் 128 பேர், சிக்கமகளூருவில் 162 பேர், சித்ரதுர்காவில் 210 பேர், தட்சிண கன்னடாவில் 303 பேர், தாவணகெரேயில் 114 பேர், தார்வாரில் 109 பேர், கதக்கில் 26 பேர், ஹாசனில் 278 பேர், ஹாவேரியில் 50 பேர், கலபுரகியில் 127 பேர், குடகில் 65 பேர், கோலாரில் 59 பேர், கொப்பலில் 77 பேர், மண்டியாவில் 124 பேர், மைசூருவில் 309 பேர், ராய்ச்சூரில் 43 பேர், ராமநகரில் 53 பேர், சிவமொக்காவில் 66 பேர், துமகூருவில் 264 பேர், உடுப்பியில் 317 பேர், உத்தர கன்னடாவில் 151 பேர், விஜயாப்புராவில் 91 பேர், யாதகிரியில் 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    புதிதாக பெங்களூரு நகரில் 18 பேர், மைசூருவில் 11 பேர், மைசூருவில் 7 பேர் உள்பட 70 பேர் இறந்தனர். நேற்று 12 ஆயிரத்து 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 84 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. 1 லட்சத்து 15 ஆயிரத்து 776 பேர் சிகிச்சையில் உள்ளனர். 928 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 78 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை 60 லட்சத்து 30 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.
    Next Story
    ×