search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    எங்கள் கட்சியின் வாக்கு வங்கிக்கு எந்த சேதாரமும் இல்லை: குமாரசாமி

    டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் எங்கள் கட்சியின் வாக்கு வங்கிக்கு எந்த சேதாரமும் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் பா.ஜனதா அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இந்த இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று, அதன் மூலம் எங்கள் கட்சி பலமாக இருக்கிறது என்ற செய்தியை பிற கட்சிகளுக்கு அனுப்புவோம். மேலும் வெற்றி பெறுவதன் மூலம் எங்கள் கட்சி தொண்டர்களும் உற்சாகம் அடைவார்கள். சிரா தொகுதி எங்கள் வசம் உள்ளது. அதை மீண்டும் கைப்பற்றுவோம்.

    வெள்ளத்தின்போது அரசு எவ்வாறு நிவாரண உதவிகளை வழங்கியது, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்த உதவிகள் என்ன? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு உதவி செய்யவில்லை. இந்த அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

    மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. நாங்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகிறோமே தவிர, தனிப்பட்ட விஷயங்கள் அல்ல. ஒக்கலிகர் சமூக வாக்குகளை இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. எப்போதும் தேர்தலின்போது, காங்கிரசார், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். எங்களை பற்றி குறை சொல்லி பேச அவர்களிடம் வேறு விஷயங்கள் இல்லை.

    இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ.வாக வரக்கூடாது என்று கருதி அந்த சமூக வாக்குகளை காங்கிரசார் பிரித்தனர். இப்போது திடீரென அக்கட்சிக்கு ஒக்கலிகர்கள் மீது பற்று வந்துள்ளது. ஒக்கலிகர் சமூகத்திற்கு எங்கள் கட்சி என்ன உதவி செய்துள்ளது என்பது அந்த சமூக மக்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரஸ் என்ன செய்தது?. டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், எங்கள் கட்சியின் வாக்கு வங்கிக்கு எந்த சேதாரமும் இல்லை.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    Next Story
    ×