search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டி

    பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட உள்ளதாக அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.
    மும்பை:

    பீகார் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் வரும் 28, நவம்பர் 3, 7 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக சிவசேனா கட்சி அறிவித்திருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகனும், சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உள்பட 22 பேர் ஈடுபடுவர்  என அக்கட்சி தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பீகார் தேர்தலில் நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. சுமார் 50 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் சமூகநலப் பணிகளில் ஈடுபட்டார்களோ அங்கு வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம் என் தெரிவித்துள்ளார்.

    பீகார் தேர்தலில் சிவசேனா வில் அம்பு சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. எனவே அக்கட்சியினர் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் எக்காளம் இசைக்கருவியை மனிதன் ஊதும் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×