search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் -கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீதி கேட்டு எதிர்க்கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. 

    இதனையடுத்து பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

    அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    ‘கிரிமினல் சட்ட நடைமுறையில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய எல்லைக்கு உட்படாத பகுதியில் நடந்த குற்றங்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். 

    வாரண்ட் இல்லாமல் கைது செய்து நேரடியாக விசாரிக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பாக உரிய நேரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்’ என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×