search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    எடியூரப்பாவை சந்திக்க வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

    முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க விரும்புகிறவர்கள், அதிகாரிகள் உள்பட யாராக இருந்தாலும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் இதுவரை வைரஸ் பாதிப்பு 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள், பல்வேறு எம்.எல்.ஏ.க்களை கொரோனா தாக்கியுள்ளது.

    கர்நாடகத்தை சேர்ந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி, அசோக் கஸ்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணராவ் எம்.எல்.ஏ. ஆகியோர் கொரோனா தாக்கி மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க விரும்புகிறவர்கள், அதிகாரிகள் உள்பட யாராக இருந்தாலும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக முதல்-மந்திரியின் கிருஷ்ணா இல்லத்தில் ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பரிசோதனை செய்து கொள்பவர்களின் முடிவு, ஒரு மணி நேரத்தில் கிடைத்துவிடும். அதில் வைரஸ் பாதிப்பு இல்லை என்று முடிவு வருபவர்கள் மட்டுமே முதல்-மந்திரியை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது.
    Next Story
    ×