search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

    பேரழிவின்போது சிறப்பான சேவை- இந்திய விமானப்படையினருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

    இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமானப்படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் 88-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக அணிவகுப்பில் ரபேல் விமானம் பங்கேற்க உள்ளது.

    இந்நிலையில், விமானப் படை தினத்தையொட்டி விமானப் படையினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நீங்கள் நாட்டின் வான் பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பேரழிவுகளின் போது மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். உங்களின் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது’ என்று கூறி உள்ளார்.

    நமது விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவுரவிப்பதில் பெருமைப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நமது வான்பகுதியை பாதுகாப்பதிலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவுகால நிவாரணப் பணிகளின்போது அதிகாரிகளுக்கு உதவுவதில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய விமானப்படையினருக்கு நாடு கடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    எந்த நிலையிலும் இந்திய விமானப்படை, எப்போதும் நாட்டின் வான் பகுதியை பாதுகாக்கும் என்று நம்புவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×