search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வானி குமார்
    X
    அஸ்வானி குமார்

    சிபிஐ முன்னாள் இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை

    சிபிஐ முன்னாள் இயக்குநரும், மணிப்பூர் மற்றும் நாகலாந்து கவர்னராக செயல்பட்டவருமான அஸ்வானி குமார் நேற்று அவரது வீட்டில் தூக்கிதற்கொலை செய்துகொண்டார்.
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வானி குமார் 2006 முதல் 2008 (ஜூன்) வரை அம்மாநில டிஜிபி-யாக செயல்பட்டுள்ளனர். பின்னர் பதவி உயர்வு காரணமாக 2008 (ஆகஸ்ட்) முதல் 2010 வரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார். 

    இதையடுத்து, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் கவர்னராகவும் அஸ்வானி குமார் செயல்பட்டுள்ளார். 69 வயது நிரம்பிய இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அஸ்வானி குமார் தனது குடும்பத்துடன் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், அஸ்வானி குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஸ்வானி குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    மேலும், தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    மன அழுத்தம் காரணமாகவே அஸ்வானி குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  
    Next Story
    ×