
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு குமாரசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அவரிடம் ஏதாவது சாட்சி உள்ளதா?. தான் வளர்ந்து வந்த கட்சிக்கு துரோகம் செய்வது சித்தராமையாவின் வாடிக்கை. எனக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். புனிதமான நட்பை நான் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தியது இல்லை.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.