search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல்- ராகுல் காந்தி விமர்சனம்

    வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதலாகும். விவசாயிகளுக்கு எதிராக கருப்பு சட்டங்களை மோடி அரசு இயற்றியுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
    பாட்டியாலா:

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

     வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதலாகும். விவசாயிகளுக்கு எதிராக கருப்பு சட்டங்களை மோடி அரசு இயற்றியுள்ளது. கொரோனா குறித்து நான் பிப்ரவரி மாதம் எச்சரித்தேன். அப்போது நான் ஜோக் அடிப்பதாக கூறினார். கொரோனா ஊரடங்கின்போது, சிறு தொழில்களை மோடி அரசாங்கம் நசுக்கிவிட்டது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே சிறு குறு தொழில்கள்தான்.

    ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் நாங்கள் உள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச நெருக்கடி கொடுக்கிறது. ஆனால், ஹத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்றார்.

    Next Story
    ×