search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்க வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்

    ஏழை பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தரிசனம் கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் ரூ.300 கட்டணத்தில் 13 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கொரோனா அச்சம் காரணமாகவும், புரட்டாசி என்பதால் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரும் என்பதையும் கணக்கில் கொண்டு இலவச தரிசனத்தை தேவஸ்தானம் நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில் ரூ.300 சிறப்பு கட்டணத்தில் மேலும் கூடுதலாக 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதற்கான டிக்கெட் நேற்று முதல் வெளியிடப்பட்டுள்ளது. தினந்தோறும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதன்படி தினந்தோறும் 16 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் சாமி தரிசனத்திற்கு செல்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களில் மட்டும் 20,000 கல்யாண உற்சவ டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தேவஸ்தானம் ரூ.1,000 கல்யாண உற்சவம் டிக்கெட்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

    நாள்தோறும் 1,000 பேருக்கும் மேல் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு டிக்கெட் மூலமும் 2 பேர் சாமி தரிசனம் செய்யலாம்

    இதுதவிர வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் ரூ.300 சிறப்பு விரைவு தரிசன சுபதம் நுழைவு வாயில் டிக்கெட்டுகள் மூலமாகவும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதன் மூலம் தினந்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சூழலில் ஏழை பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது திருப்பதியில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே நாள்தோறும் 5,000 இலவச தரிசன டிக்கெட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. விழாவில் 4 மாடவீதியில் சாமி உலா நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இலவச தரிசனத்தை அனுமதித்து பிரம்மோற்சவ விழாவிலும் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×