search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் (கோப்பு படம்)
    X
    காங்கிரஸ் (கோப்பு படம்)

    காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது - முக்கியத்தலைவர்கள் பங்கேற்பு

    காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் வைத்து நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    புதுடெல்லி:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ம் தேதி, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்த தேர்தலில், பாஜக அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை வீழ்த்தும் வகையில், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மெகா கூட்டணியில் தொகுதி மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70 இடங்களிலு, இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) 19 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 6 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களில் போட்டியிடுகின்றன.

    பீகார் தேர்தலை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் அறிக்கை, பிரசார யுக்தி, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், வேளாண் மசோதா எதிர்ப்பு, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

    Next Story
    ×