search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
    X
    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

    பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எங்கும் போராட்டம் நடக்கவில்லை -பிரகாஷ் ஜவடேகர்

    பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எங்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
    பனாஜி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

    பிரதமர் மோடிக்கு தேசத்தைப் பற்றி ஒரு பெரிய சிந்தனை இருக்கிறது. ஜிஎஸ்டி காரணமாக நாம் ஒரு நாடு, ஒரு வரியை பெற்றோம். அதேபோல், வேளாண் மசோதாக்கள் மூலம் ஒரு நாடு, ஒரு சந்தையை பெறுவோம். தேசிய தேர்வானது நமக்கு ஒரு தேசம், ஒரு தேர்வை வழங்குகிறது. இதேபோல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டை அறிவித்திருக்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எங்கு போராட்டம் நடக்கிறது? பஞ்சாப் மாநிலத்தில்கூட காங்கிரஸ் ஆட்சி என்பதால்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. அங்கும் காங்கிரஸ் ஆட்சி இல்லையென்றால் போராட்டம் நடக்காது. உண்மையில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×