search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    இடைத்தேர்தல் குறித்து குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

    ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் கூட்டம் பெங்களூருவில் உள்ள குமாரசாமி இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் சிரா மற்றும் ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் கூட்டம் பெங்களூருவில் உள்ள குமாரசாமி இல்லத்தில் அவரது தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், தங்களின் கருத்துகளை குமாரசாமியிடம் தெரிவித்தனர். இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகி அப்பாஜி கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் குறித்து குமாரசாமி தலைமையில் எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் மூன்று பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளோம். அதில் ஒருவரை எங்கள் கட்சி மேலிடம் வேட்பாளராக அறிவிக்கும். கடந்த தேர்தலில் அந்த தொகுதியில் எங்கள் கட்சி தனித்து போட்டியிட்டு சுமார் 60 ஆயிரம் வாக்குகளை பெற்றது. அதனால் இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்கள் கட்சியை வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×