search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாத்மா காந்தி
    X
    மகாத்மா காந்தி

    இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பரிசீலனை

    மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் பரிந்துரையை இங்கிலாந்து அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
    புதுடெல்லி:

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமானவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி. உலக அளவிலும் மிகமுக்கிய தலைவராக அறியப்படும் மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக இங்கிலாந்து அண்மையில் தெரிவித்திருந்தது.

    அந்த நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனக், ராயல் மின்ட் ஆலோசனை குழுவிடம் (ஆர்.எம்.ஏ.சி) இங்கிலாந்தில் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் பரிந்துரையை இங்கிலாந்து அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உலகுக்கு சமத்துவம் மற்றும் மனித நேயத்தின் சின்னமாக திகழ்கிறார். அவரது உலகளாவிய பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்க இங்கிலாந்தின் நாணய திட்டத்தை விட வேறு எதுவும் பெரிதாக இருக்காது” என்றார்.
    Next Story
    ×